By February 5, 20190 CommentsReport

பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு..!!

கமல்ஹாசன் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்தார். இந்த படம் கமல்-‌ஷங்கர் இணைந்து பணியாற்றிய ஒரே படம்.

தற்போது 22 ஆண்டுகள் கழித்து இதே கூட்டணியில் ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது. இந்த படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்துக்காக தனது அரசியல் பணிகளுக்கு இடையே உடல் அமைப்பை மாற்றி அமைத்துள்ளார் கமல். பொள்ளாச்சி, சென்னை, ஐதராபாத் மற்றும் பல வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்து இருந்தது. எழுத்தாளர்கள் ஜெய மோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’க்கான வசனங்களை எழுதி உள்ளனர்.

படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் தீவிரமாக நடந்த நிலையில், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெளியூர் செல்லலாம் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இந்தியன் 2 வேடத்துக்கான மேக்கப்பில் ‌ஷங்கருக்கும் கமலுக்கும் திருப்தி ஏற்படாததால் தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

அந்த காட்சிகளை பார்த்த ‌ஷங்கரும், கமலும் மேக்கப் இயல்பாகவும், பொருத்தமாகவும் இல்லை என்று கருதி இருக்கிறார்கள். எனவே படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் ‌ஷங்கர் அங்குள்ள மேக்கப் கலைஞர்களுடன் ஆலோசனை நடத்தி மேக்கப் டெஸ்ட் எடுக்க உள்ளார். மேக்கப் பொருந்திய பின்னர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*