By February 24, 20190 CommentsReport

96 தெலுங்கு ரீமேக்கில் சிக்கல்..!!

விஜய்சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படம் ரிலீஸ் அன்றே பைனான்ஸ் சிக்கல் முதல் தயாரிப்பாளர் இல்லாமல் நூறாவது நாள் கொண்டாடியது வரை பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது.

தமிழில் இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு படத்தில் சர்வானந்த், சமந்தா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணிகளில் ஒன்று, இசை.

படத்தின் தெலுங்கு ரீமேக்கில், தமிழ்ப் படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரை மாற்றிவிட்டு, தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரை இசையமைக்க வைக்கலாம் எனத் தயாரிப்பாளர் கூறிவருகிறார்.

இதனால், ‘தயாரிப்பாளர் ‘தில்’ ராஜு மற்றும் இயக்குனர் பிரேம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ எனவும் செய்திகள் வருகின்றன. அனேகமாக இயக்குனர் மாற்றப்படலாம் என்கிறார்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*