By February 25, 20190 CommentsReport

மோகன்லால், பிரபாசுடன் நடிக்க அஜித் விருப்பம்..!!

விஸ்வாசம் படத்தை அடுத்து தனது 59-வது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அதே ஸ்டுடியோவில் பல்வேறு படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மோகன்லால் நடிக்க பிரியதர்‌ஷன் இயக்கும் மராக்கர் அரபிக்கடலிண்ட சிம்ஹம் என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் அவர்களின் படப்பிடிப்பு அரங்கிற்கு திடீரென்று சென்ற அஜித் அங்கிருந்த மோகன்லால், பிரியதர்‌ஷன் இருவரையும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு நடப்பதை அறிந்து அவரது அரங்கிற்கும் சென்றுள்ளார். அஜித்தை கண்டதும் அன்புடன் வரவேற்றார் பிரபாஸ். ஆரம்பம் படத்தில் அஜித்துடன் ராணா நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை தன்னிடம் பாகுபலி படப்பிடிப்பின் போது ராணா பகிர்ந்துகொண்டதை பிரபாஸ் கூறி உள்ளார்.

சுமார் ஒரு மணிநேரம் பிரபாசுடன் மனம்விட்டு பேசிக்கொண்டிருந்த அஜித் பின்னர் புறப்பட்டு சென்றார். முன்னதாக, மோகன்லால், பிரபாஸ் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக அவர்களிடம் அஜித் தெரிவித்தாராம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*