By March 3, 20190 CommentsReport

மணிரத்னம் படத்தில் சரத்குமார் – ராதிகா..!!

ணிரத்னத்தின் முன்னாள் உதவி இயக்குனரும் படை வீரன் படத்தின் இயக்குனருமான தனா அடுத்து விக்ரம் பிரபுவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். மணிரத்னம் கதை, வசனம் எழுதும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியனும் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் சரத்குமாரும் ராதிகாவும் கணவன் மனைவியாக நடிக்க இருக்கிறார்கள். சரத்குமார் நடிப்பில் அடங்காதே படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஜிவி.பிரகாஷ், சுரபி நடித்துள்ள இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார்.

சரத்குமாரும் ராதிகாவும் இணைந்து ஏற்கனவே நம்ம அண்ணாச்சி, சூர்ய வம்சம் படங்களில் நடித்து உள்ளனர். மணிரத்னம் படத்துக்காக 3வது முறையாக இணைகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*