By March 7, 20190 CommentsReport

கைதி தலைப்பில் கார்த்தி..!!

தேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி தற்போது ‘மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிசியாக நடித்து வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்திற்கு கைதி என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்படி, கைதி என்ற தலைப்பை படக்குழு உறுதி செய்துள்ளதாகவும், பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நாயகி யாரும் கிடையாது. 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், எஞ்சிய படப்பிடிப்பையும் விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தின் கதை நகருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை முடித்த பிறகு, இந்த மாத இறுதிக்குள் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி இணையவிருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*