By March 7, 20190 CommentsReport

அடுத்தடுத்து வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் இரு படங்கள்..!!

சர்வம் தாள மயம் படத்தில் நடித்த ஜி.வி.பிரகாசுக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், அவரது நடிப்பில் அடுத்ததாக 100 பெர்சண்ட் காதல், குப்பத்து ராஜா, ஐங்கரன், அடங்காதே, ஜெயில், வாட்ச்மேன், 4ஜி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.

இதில் பாபா பாஸ்கர் இயக்கியிருக்கும் `குப்பத்து ராஜா’ வருகிற ஏப்ரல் 5-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஜய் இயக்கியிருக்கும் `வாட்ச்மேன்’ படம் ஏப்ரல் 12-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜி.வி.பிரகாஷின் இரு படங்கள் அடுத்தடுத்த வாரத்தில் ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். ராஜ் அருண், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிரவ் ஷா, சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*