By March 9, 20190 CommentsReport

ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் காதலிக்க யாருமில்லை..!!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் `குப்பத்து ராஜா’ வருகிற ஏப்ரல் 5-ந் தேதியும், `வாட்ச்மேன்’ ஏப்ரல் 12-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 100% காதல், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், 4ஜி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. ஜி.வி.பிரகாஷ் தற்போது காதலை தேடி நித்யா நந்தா, ரெட்டை கொம்பு, கமல் பிரகாஷ் இயக்கும் படம் என பிசியாக இருக்கிறார். நடிப்பது மட்டுமின்றி இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதில் கமல் பிரகாஷ் இயக்கும் படத்திற்கு `காதலிக்க யாருமில்லை’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். திகில் கலந்த பேண்டஸி காமெடி படமாக உருவாகும் இதில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வெங்கடேஷ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். சிவா படத்தொகுப்பையும், கமலநாதன் கலை பணிகளையும், டான் அசோக் சண்டைக் காட்சிகளையும் வடிவமைக்கின்றனர். ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜன் இந்த படத்தை தயாரிக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*