By March 26, 20190 CommentsReport

விஜய் ஆண்டனியுடன் இணைந்த கஸ்தூரி..!!

`கொலைகாரன்’, `அக்னிச் சிறகுகள்’ படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது `தமிழரசன்’, `காக்கி’ படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், சுரேஷ் கோபி, பூமிகா, சங்கீதா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கஸ்தூரி ஒப்பந்தமாகி இருக்கிறார். கஸ்தூரி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும், அவர் இதில் டாக்டராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனியுடன் பல காட்சிகளில் கஸ்தூரி இணைந்து நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*