By April 5, 20190 CommentsReport

ஜி.வி.பிரகாஷ் ஜோடியான ஈஷா ரெபா..!!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் குப்பத்து ராஜா படம் வருகிற ஏப்ரல் 5-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. தொடர்ந்து வாட்ச்மேன் படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இந்த நிலையில், எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக தெலுங்கு நடிகை ஈஷா ரெபா தமிழில் அறிமுகமாகிறார்.

அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ்.பி. பிள்ளை தயாரிக்கும் இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார். திகில் கலந்த காமெடி படமாக இந்த படம் உருவாகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*