By April 10, 20190 CommentsReport

தனுசின் அப்பா வேடம் படப்பிடிப்பு நிறைவு..!!

எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி கொண்டிருக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் தனுசுக்கு இரட்டை வேடம் எனத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. படத்தில் ஒரு ஹீரோயினாக நடிகை சினேகா கமிட் ஆகியிருக்கிறார். இன்னொரு கதாநாயகி யார் என்று தெரியாத நிலையில் திருடன் கதாபாத்திரத்தில் தனுஷ் இந்தப் படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

குற்றாலத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பில் அப்பா தனுசின் பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் மற்றும் இசையமைப்பாளராக விவேக் மெர்வின் ஒப்பந்தமாகியுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*