By April 11, 20190 CommentsReport

வசந்தபாலனுடன் இணையும் விஷ்ணுவிஷால்..!!

‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயில்’. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், வசந்தபாலன் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். அதில், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

படப்பிடிப்பை அடுத்த மாதம் (மே) தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*