By April 16, 20190 CommentsReport

கடாரம் கொண்டான் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!!

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்’. படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இசையமைக்கும் பணிகளில் ஜிப்ரான் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் பின்னணி இசைக்கான பணியை துவங்கிவிட்டதாகவும், பின்னணி வேலைகள் சிறப்பாக உருவாகி வருவதாகவும், படத்தின் முதல் பாடல் வருகிற மே 1-ந் தேதி வெளியாகும் என்றும் ஜிப்ரான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற மே இறுதி அல்லது ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*