By April 21, 20190 CommentsReport

மிஸ்டர்.லோக்கல் – தேவராட்டம் ரிலீஸ் தேதிகளை மாற்றிய ஸ்டூடியோ கிரீன்..!!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மிஸ்டர்.லோக்கல். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

அதேபோல் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் தேவராட்டம் படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் மே 17-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றி புதிய ரிலீஸ் தேதியை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கவுதம் கார்த்திக்கின் தேவராட்டம் வருகிற மே 1-ந் தேதியும், சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் மே 17-ந் தேதியும் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*