By April 22, 20190 CommentsReport

சிவகார்த்திகேயனுடன் போட்டியில்லை, முன்பே ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்..!!

சு.அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் சிந்துபாத் படம் மே 16-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தை முன்னதாக திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர்.லோக்கல் படம் மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் மே 17-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் அறிவித்தது. இறுதிக்கட்ட பணிகள் இன்னமும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் படங்கள் மோதுவதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் சிந்துபாத் படத்தை மே 3-ந் தேதி ரிலீஸ் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அருண்குமார் – விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வன்சன் மூவிஸ் மற்றும் கே புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*