By April 22, 20190 CommentsReport

சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?..!!

சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப்படம் மே 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திடீரென மிஸ்டர்.லோக்கல் மே 17 அன்று வெளியாகும் என்று இப்படத்தை தயாரித்திருக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் விசாரித்த போது, லாரன்ஸின் காஞ்சனா 3 படத்திற்கு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்கிறபோது குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் வரை படத்தை ஓட்ட வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட பின்னரே ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் காஞ்சனா 3 படம் வெளியிடப்பட்டிருக்கும் சுமார் 450 திரையரங்குகளில் புதிய படங்களை திரையிட முடியாது.

அதோடு ஏப்ரல் 26 அன்று மார்வெலின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் என்ற ஆங்கிலப் படமும் வெளியாக இருக்கிறது. அதிக எதிர்பார்ப்பில் உள்ளதால் அவை 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொள்ளும். தமிழகத்தில் மொத்தம் இருப்பது 1100 திரையரங்குகள். இவற்றால் மிஸ்டர்.லோக்கல் படத்துக்கு முக்கிய நகரங்களில் அதிகமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த தேதி மாற்றம்” என்று கூறுகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*