By April 28, 20190 CommentsReport

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் வசூல் நிலவரம் – ஸ்டார் வார்ஸ் சாதனையை முறியடித்தது..!!

மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு தி அவெஞ்சர்ஸ் படத்தை வெளியிட்டது. காமிக்ஸ் படக்கதையை பின்னணியாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஹாலிவுட் படம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து தி அவெஞ்சர்ஸ் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. வசூலிலும் “அவெஞ்சர்ஸ்” படங்கள் சாதனை படைத்தன.

இந்த நிலையில் அவெஞ்சர்ஸ் படங்களில் இறுதி படமாக கருதப்படும் “அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்” படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. அவெஞ்சர்ஸ் காமிக்ஸ் படத்தொடர்ச்சியின் இறுதி படம் என்பதால் இந்த படத்துக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்பட்டது.

அமெரிக்காவில் முதல் நாளில் இந்த படம் 419 கோடி ரூபாய் வசூலி செய்து சாதனை படைத்துள்ளது. ஹாலிவுட் படங்களில் இதுவரை “ஸ்டார்வார்ஸ்-தி போர்ஸ் அவக்கன்ஸ்” படம் தான் வசூல் சாதனை படைத்த படமாக இருந்து வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த படம் 398 கோடி ரூபாய் வசூல் செய்ததுதான் ஹாலிவுட் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது “அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்” படம் முறியடித்துள்ளது.

இதற்கிடையே உலகம் முழுவதும் வசூலிலும் “அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்” படம் சாதனை படைக்க தொடங்கி உள்ளது. இந்த படம் வெளியான முதல் 2 நாட்களில் மொத்தம் 2,130 கோடி ரூபாய் வசூல் செய்து இமாலய சாதனை படைத்துள்ளது.

சீனாவில் இந்த படத்துக்கு அதிகளவு வசூலாகி இருப் பது புதிய சாதனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் இந்த படத்துக்கு கணிசமாக அளவுக்கு பணம் வசூலாகி இருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*