ஹரீஷ் கல்யாண் படத்தில் மேலும் ஒரு கதாநாயகி..!!

ஹரீஷ் கல்யாண் படத்தில் தற்போது ‘தனுஷ் ராசி நேயர்களே’ என்ற படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக ரியா சக்ரவர்த்தி நடிப்பதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. தற்போது ரெபா மோனிகா ஜான் மற்றொரு கதாநாயகியாக நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து ரெபா மோனிகா ஜான் கூறும்போது, “இந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை பரிசீலித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனர் சஞ்சய் பாரதிக்கும் நன்றி. இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பதாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதே நேரத்தில், இயக்குனர் சஞ்சய் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க, என்னை தான் மனதில் நினைத்திருந்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

உண்மையில், நான் இதுவரை செய்த படங்களுடன் ஒப்பிடும்போது இந்த படம் முற்றிலும் புதியதாக இருக்கும். தனுசு ராசி நேயர்களே குடும்பத்துடன் ரசிக்கும் காதல், நகைச்சுவை கலந்த ஒரு பொழுதுபோக்கு படம். சஞ்சய் எனக்கு கதையை விளக்கி கூறியபோது அது மிகவும் ஜாலியாக இருந்தது. இந்த குழுவில் ஒரு சிறந்த அனுபவத்தை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடந்து வருகிறது. குறுகிய காலத்தில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ரெபா மோனிகா ஜான் இதற்கு முன் தமிழில் ஜெய்க்கு ஜோடியாக ‘ஜருகண்டி’ படத்தில் நடித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*