தேசிய அளவிலான கராத்தே போட்டியில் நடிகர் சூர்யா மகன் சாதனை..!!

சூர்யா – ஜோதிகா தம்பதிகளுக்கு தியா என்ற பெண் குழந்தையும், தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் இருவருமே பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

தியா சமீபத்தில் மாநில அளவில் நடந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற தகவல் வெளியாகி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது. தற்போது டெல்லியில் தேசிய அளவில் நடந்த ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்துகொண்டு தேவ் வெற்றி பெற்றுள்ளார்.

40 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் தேவுக்கு தண்டர் கேக் பிரிவில் வெற்றி கிடைத்துள்ளது. இந்த போட்டியை காண சூர்யாவும், ஜோதிகாவும் நேரில் சென்று இருந்தார்கள். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி தேவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சூர்யா தற்போது என்ஜிகே படத்தை முடித்துவிட்டு, காப்பான், சூரரைப் போற்று படங்களில் நடித்து வருகிறார். ஜோதிகாவும் மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தை இயக்கி பிரபலமான ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி உள்ளது. இதில் ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*