ஓவியா பிறந்தநாள் விழாவில் ஆரவ்..!!

கடந்த 2017-ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொண்டார். இதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினாலும் ரசிகர்கள் ஆதரவால் ஓவியாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. சமீபத்தில் இவரது நடிப்பில் 90 எம்.எல் திரைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அடுத்து காஞ்சனா 3 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சக போட்டியாளரான ஆரவ்வை காதலிப்பதாக கூறினார் ஓவியா. பின்னர் நண்பர் என்றார். இந்நிலையில் ஆரவ்வுடன் தனது 28-வது பிறந்தநாளை நேற்று ஓவியா கொண்டாடி இருக்கிறார்.

நள்ளிரவில் ஆரவ், காயத்ரி உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் மத்தியில் பிறந்தநாள் கொண்டாடும் படங்கள் வைரலாகி வருகின்றன. ஆரவ் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ராஜ பீமா’ திரைப்படத்தில், ஒரு பாடலுக்கு ஓவியா நடனமாடி இருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*