இது ஜோதிகாவின் ஜாக்பாட்..!!
`குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் அடுத்ததாக ஜோதிகா, ரேவதியை வைத்து புதிய படமொன்றை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.
`ஜாக்பாட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் நேற்று வெளியானது. அதில் ஒரு போஸ்டரில் ஜோதிகாவும், ரேவதியும் போலீஸ் தோற்றத்தில் தோன்றுகின்றனர். ஆக்ஷன் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க, விஜய் படத்தொகுப்பை கவனிக்கிறார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
ஜோதிகா தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜுடன் இணைந்து நடித்து வருகிறார். இதுதவிர எஸ்.ராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.