சூர்யாவுக்காக கிராமத்து சாயலில் மாஸான கதை தயார் – பாண்டிராஜ்..!!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவர் பாண்டிராஜ். இவர் இயக்குநராக அறிமுகமான பசங்க படம் வெளியாகி நேற்றோடு 10 ஆண்டுகள் ஆனது என்ற தகவலை மறக்கமுடியாத நினைவுகள் என்று குறிப்பிட்டு நேற்று பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இவரது இயக்கத்தில் வெளியான வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவர் கடைசியாக கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கியிருந்தார். சூர்யா தயாரித்த இந்த படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில், சமீபத்தில் பாண்டிராஜின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார்.

இந்த நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து பாண்டிராஜ் ஒரு ட்விட் போட்டார். அந்த ட்விட்டை குறிப்பிட்டு, ரசிகர் ஒருவர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கும்படி பாண்டிராஜிடம் கேட்க, அதற்கு அவர் அளித்த பதிலில், பக்கா மாஸாக கிராமத்து சாயலில் அதிரடி, காமெடி, குடும்ப சென்டிமண்ட்டுடன் கதை தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதன்மூலம் பாண்டிராஜ் – சூர்யா கூட்டணி விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*