நெருங்கிய தோழிகளான ஆண்ட்ரியா – தமன்னா..!!

ஆங்கிலோ இந்தியன் பெண்ணான ஆண்ட்ரியா ரோமன் கத்தோலிக் குடும்பத்தைச் சேர்ந்தவர், பிறந்தது அரக்கோணம். தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் தான் முடித்தார்.

கவுதம் வாசுதேவ் மேனனின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பாகவே, லைலா மற்றும் பிரசன்னா நடிப்பில் வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் சிறிய கேரக்டர் ஒன்றில் நடித்திருந்தார். ஆண்ட்ரியாவுக்கு நெருக்கமான தோழியாக தமன்னா மாறி இருக்கிறார்.

தமன்னாவும் இவரும் இணைந்து நடித்த தெலுங்குப் படமான ‘தடகா’ பெரிய வெற்றி பெற்றது. இருவருமே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருப்பவர்கள். இருவரும் ஒரே தேதியில் பிறந்தவர்கள் என்பதும் ஆச்சர்யமான ஒற்றுமை.


Post a Comment

CAPTCHA
Refresh

*