எலியிடம் சிக்கித் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா..!!

‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார்.

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. எலியால் ஏற்படும் விபரீதமும், எலியிடம் சிக்கித் தவிப்பவராகவும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.

இந்த டீசர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*