முரட்டு இயக்குநரிடம் மாட்டிக் கொண்ட அரவிந்த்சாமி..!!

இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஹர ஹர மஹாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களை கவுதம் கார்த்திக்கை வைத்து இயக்கினார். இந்த இரு படங்களுக்கும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என்ற படத்தை கொடுத்தார்.

பின்னர் மீண்டும் கவுதம் கார்த்திக்குடன் தீமை தான் வெல்லும் என்ற படத்தில் இணையவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே இயக்குநர் – தயாரிப்பாளர் கருத்து வேறுபாட்டால் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார்.

எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. படத்தின் பூஜையில் நடிகர் கவுதம் கார்த்திக், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, பல்லு ஒளிப்பதிவையும், பிரசன்னா படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*