கவுதம் மேனன் இயக்கத்தில் சோனியா அகர்வால்..!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படத்தை இயக்குவதில் இயக்குநர்கள் பலரிடையே போட்டி நிலவுகிறது. பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க போட்டி போடுகிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர்.

கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஜெயலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடிகை சோனியா அகர்வால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறியுள்ளார்.

சோனியா அகர்வால் நடிப்பில் தனிமை என்ற படம் இன்று திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*