சாம் ஆண்டன் என்னை ஏமாற்றிவிட்டார் – சாம்.சி.எஸ்..!!

ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில், சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 100. அதர்வா, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துள்ளனர். முதன்முறையாக அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் இந்த படம் வருகிற மே 9-ந் தேதி திரைக்கு வருகிறது. குரு ஸ்ரீ மிஷ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் சிஎஸ் பதம்சந்த் ஜெயின் இந்த படத்தை தமிழகம் முழுக்க வெளியிடுகிறார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பேசும் போது,

விக்ரம் வேதா, அடங்க மறு, 100, அயோக்யா என அடுத்தடுத்து போலீஸ் படங்களாக நான் இசையமைத்து வருகிறேன். வெளியில் இருந்து பார்த்தால் எல்லா படங்களும் ஒரே மாதிரியாக தோன்றும். ஆனால் திரைக்கதையில் ஒவ்வொன்றும் வித்தியாசமானது. திரைக்கதை தான் பின்னணி இசையை கோரும். எனக்கு காமெடி படங்கள் பண்ணனும்னு ஆசை, சாம் எனக்கு கதை சொல்ல வந்தபோது எனக்கு ஒரு நல்ல காமெடி படம் மாட்டிகிச்சு என சந்தோஷப்பட்டேன். ஆனால் இதுவும் ஒரு போலீஸ் படம், சீரியஸ் படமாகவே இருந்தது.

அவர் காமெடியை விட திரில்லர் படங்களை தான் மிகச்சிறப்பாக எடுக்கிறார். என்னை சுதந்திரமாக வேலை பார்க்க விட்டது என் வேலையை ஊக்கப்படுத்தியது. சண்டைக்காட்சிகளில் அதர்வா கலக்கி இருக்கிறார். இது சமூகத்தில் தற்போது நடக்கிற விஷயங்களை பேசும், கண்டிப்பாக இன்றைய காலகட்டத்துக்கு தேவையான ஒரு படம். இந்த படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. நிச்சயம் அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக அமையும் என்றார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*