திரிஷா பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுக்கும் விஜய் சேதுபதி..!!

திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96, இந்த ஆண்டு வெளியான `பேட்ட’ படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. திரிஷா நடிப்பில் அடுத்ததாக `சதுரங்கவேட்டை 2′, `கர்ஜனை’ உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. திரிஷா தற்போது `1818′, `பரமபதம் விளையாட்டு’, ராங்கி, சிம்ரனுடன் ஆக்ஷன் அட்வஞ்சர் படம் என பிசியாக நடித்து வருகிறார்.

இதில் த்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டிரைலர் திரிஷா பிறந்நாளான நாளை (மே 4) வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தின் டிரைலரை 96 படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்த விஜய் சேதுபதி வெளியிடுகிறார்.

திருஞானம் இயக்கும் இந்த படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

24 Hrs நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் கணேஷ் இசையமைக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*