தளபதி 63 படப்பிடிப்பு – முக்கிய தகவல்..!!

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இதனால் கால்பந்து வீராங்கனைகளாக இளம் நடிகைகளான இந்துஜா, ஆத்மிகா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொலம்மா உள்ளிட்டடோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடந்து வருகிறது. இதற்காக தேவாலயம், ஆஸ்பத்திரி, மருந்தகங்கள், பள்ளிக்கூடம் என பல படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு டெல்லி செல்கிறது. அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதிர், யோகி பாபு, ஞானசம்பந்தம், ஆனந்த்ராஜ், சாய் தீனா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*