கவுதம் மேனனுக்கு நோ சொன்ன மஞ்சிமா மோகன்..!!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அடுத்து அவர் நடிப்பில் வெளியான சத்ரியன், இப்படை வெல்லும் படங்கள் பெரிதாக போகவில்லை. தேவராட்டம் படத்தில் நடித்துள்ள மஞ்சிமா அளித்த பேட்டி: நான் நல்ல படங்களாக தான் தேர்வு செய்கிறேன்.

அச்சம் என்பது மடமையடா படம் ரிலீசாவதற்கு முன்பே வந்த வாய்ப்பு தான் சத்ரியன். ஆனால் அந்த படத்தை பார்த்த போது இது சரியாக போகாது என்பதை உணர்ந்துகொண்டேன். அது எனக்கு ஒரு வருத்தத்தை தந்தது. பிறகு சுதாரித்து கொண்டு நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன். ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அந்த படங்களுக்கு ஏற்கனவே நடிகைகளை முடிவு செய்துவிட்டனர்.

எனவே அதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதா பற்றிய வெப்சீரிஸில் நடிக்க கவுதம் கூப்பிட்டார். ஆனால் வெப்சீரிஸில் நடிக்க விருப்பம் இல்லாததால் நோ சொல்லி விட்டேன். ஒரு நடிகையாக எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அந்த வகையில் சசிகலா கதாபாத்திரத்திலும் நடிக்க நான் தயார். இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன். இதில் நடிக்க மாட்டேன் என எந்த வரையறையும் எனக்கு கிடையாது. சினிமாவில் நான் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்”.


Post a Comment

CAPTCHA
Refresh

*