நான் வருவேன், கண் முன்னாடி வந்து நிற்பேன் – அதர்வா..!!

ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `100′. இந்த படத்தில் அதர்வா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பள்ளி சிறுமிகளுக்கு நிகழும் கொடூரம், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலரில் நான் வருவேன், கண் முன்னாடி வந்து நிற்பேன் என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மே 9ம் தேதி வெளியாக இருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*