ஜெயம் ரவியின் கோமாளி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!!

அடங்கமறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘கோமாளி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியான நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.

இந்த படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக்கும், தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் விஜய்யும் கைப்பற்றியிருக்கின்றன. முன்னதாக ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தையும் ஸ்டார் விஜய் கைப்பற்றியிருந்தது. இதன்மூலம் ஜெயம் ரவியின் அடுத்தடுத்த 2 படங்களை ஸ்டார் விஜய் கைப்பற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஜெயம் ரவி, ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் நடித்திருக்கிறார். இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் காமெடி வேடங்களில் வர, ஆர்.ஜே ஆனந்தி இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய உலகையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சித்தரிக்கும் படமாக, நகைச்சுவை கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*