மிஸ்டர்.லோக்கல் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!!
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் ஒரு சிங்கிள் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே,இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார்.