பொன்னியின் செல்வனில் அமலாபால்..!!

இயக்குநர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்கான பணிகளில் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். நயன்தாரா, அனுஷ்காவுடனும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மணிரத்னம் தற்போது படத்திற்கான செட் அமைக்கும் இடங்களை தேர்வு செய்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும் நடிக்க இருக்கின்றனர். இவர்களிடம் குதிரை ஏற்றம், வாள் பயிற்சிகளை மேற்கொள்ள மணிரத்னம் அறிவுறுத்தியிருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*