அவர் கேட்டதால் நடித்தேன் – ஹரீஷ் கல்யாண்..!!

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியாலும், அதன் பின் நடித்த படங்கள் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ஹரீஷ் கல்யாண்.

சமீபத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜெர்சி’ தெலுங்கு படத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்திருக்கிறார். அந்த வேடத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: –

‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்‘ படங்களை பார்த்துவிட்டு அனிருத்தின் நண்பர் சித்தார்த் மூலமாக ‘ஜெர்சி’ படத்துக்காக என்னை அணுகினார்கள். என் ரெண்டு படங்களுடைய தெலுங்கு டப்பிங் பதிப்பு ரிலீசாக இருக்கிற நேரத்துல இந்தப் படத்துல சின்ன ரோல்ல பண்றது சரியா இருக்குமான்னு யோசனை இருந்தது. அப்புறம், நடிகர் நானி எனக்குப் போன் பண்ணி ‘உங்க படங்களை பார்த்திருக்கேன் பிரதர். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

நீங்க இந்த கேரக்டர் பண்ணா நல்லா இருக்கும். இந்தப் படத்தை ஆரம்பிக்கிறதும் முடிக்கிறதும் உங்க கேரக்டர்தான்’னு சொன்னார். அப்புறம், டைரக்டர் கிட்ட கதை கேட்டுட்டு நானிக்குப் போன் பண்ணி, ‘நீங்க கொடுத்த நம்பிக்கையில் தான் பண்றேன் பிரதர்’னு சொன்னேன். 10 நிமிடம் படத்துல வந்தாலும் என் கேரக்டர் ரொம்ப எமோ‌ஷனலானது.


Post a Comment

CAPTCHA
Refresh

*