காதலருடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் எமி ஜாக்சன்..!!

மதராசபட்டிணம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இங்கிலாந்தை சேர்ந்த இவர் தொடர்ந்து தாண்டவம், தெறி, 2.0 படங்களில் நடித்தார்.

எமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜார்ஜை காதலித்து வந்தார். ஜார்ஜ் தன்னிடம் காதலை தெரிவித்ததாகவும் தான் சம்மதித்து விட்டதாகவும் புத்தாண்டு அன்று இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். எமியும் அவரது காதலரும் அடுத்த ஆண்டு கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு தீவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இருவருக்கும் ஏற்கனவே திட்டமிட்டபடி நிச்சயதார்த்தம் நேற்று லண்டனில் நடந்தது. இருவரும் நிச்சயதார்த்த பார்ட்டியை பிரமாண்டமாக நடத்தி நண்பர்கள், உறவினர்களை அசத்திவிட்டனர். பார்ட்டியில் எமி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். தனது வருங்கால கணவர் ஜார்ஜுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி வைரல் ஆகிறது. எமிக்கு அக்டோபர் மாதம் பிரசவம் நடக்கும். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். ‘இது திட்டமிடப்படாத கர்ப்பம். இருந்தாலும் பெற்றோர் ஆக நானும், ஜார்ஜும் தயாராகி விட்டோம்’ என்று எமி முன்பே கூறிவிட்டார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*