சிவகார்த்திகேயனுடன் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகை..!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இது சிவகார்த்திகேயனின் 16-வது படமாகும். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகிகள், இசையமைப்பாளர்கள் பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இமான் இசையமைப்பாளரும், துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இம்மானுவேல் கதாநாயகியாகவும் படத்தில் இணைந்திருப்பதாக இன்று அறிவிப்பு வெளியானது. தற்போது மேலும் ஒரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இப்படத்தில் இணைந்திருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*