15 வருடங்களுக்கு பிறகு சிம்புவை இயக்கும் பிரபல இயக்குநர்..!!

`வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

ஹன்சிகா நடிக்கும் மஹா படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். கன்னட இயக்குநர் நார்தன் இயக்கத்தில் மப்ஃடி தமிழ் ரீமேக்கில் கேங்ஸ்டராக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கிறார். கவுதம் இதில் போலீசாக நடிக்கிறார்.

இந்த நிலையில், சிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது பற்றி இயக்குநர் ஹரி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஹரி ஏற்கனவே சிம்புவை வைத்து கோவில் என்ற படத்தை இயக்கினார். 15 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில், ஹரி – சிம்பு இணையும் புதிய படத்தை தயாரிப்பது குறித்து ஏ.எம்.ரத்னம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. சிம்பு இந்தியா திரும்பியதும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரி முன்னதாக சூர்யாவை வைத்து புதிய படமொன்றை இயக்க முடிவு செய்திருந்தார். அடுத்தடுத்த படங்களில் சூர்யா பிசியானதாலும், அந்த படத்தை தயாரிக்க இருந்த சன் பிக்சர்ஸ் பின்வாங்கியதாலும் சிம்புவை வைத்து படத்தை இயக்க ஹரி முடிவு செய்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*