கோடை விடுமுறையால் குவியும் படங்கள்..!!

கோடை விடுமுறை என்றாலே தமிழ் சினிமாவுக்கு கொண்டாட்டம் தான். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், எந்த படம் ரிலீசானாலும் முதலுக்கு மோசம் இருக்காது என்பதால் மே மாதத்தில் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய போட்டா போட்டி நடக்கும். வரும் வாரம் வெளியாக இருந்த படம் நீயா 2. இந்த படத்தில் ஜெய், ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரசா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சுரேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ‌ஷபிர் இசையமைத்துள்ளார். வரும் 10-ந் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இதன் விளம்பர வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் மே 24-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் வேண்டுகோள் வைத்ததால் அந்த வேண்டுகோளை ஏற்று மே 24-ந் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மே10-ந் தேதியை குறிவைத்து விஷாலின் அயோக்யா, ஜீவாவின் கீ, மற்றும் அதர்வாவின் 100 படங்கள் வெளியாக உள்ளன. மேலும், பேரழகி ஐ.எஸ்.ஓ., காதல் முன்னேற்றக் கழகம், சீனி ஓவியாவ விட்டா யாரு, உண்மையின் வெளிச்சம், வேதமானவள் போன்ற படங்களும் வெளிவர உள்ளன.

கோடை விடுமுறையை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவர இருக்கும் நிலையில், தியேட்டர்கள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் அறிவிக்கப்பட்ட தேதியை சில தினங்களுக்கு முன் மாற்றுவதும் நடந்து வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*