கதாநாயகியாக களமிறங்கும் அழகி..!!!

2017-ம் ஆண்டு ‘பெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு’ பட்டத்தை வென்றவர் ஷெர்லின் செத். மாடலிங் துறையில் ஈடுபட்டுவந்த இவர் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

பாலு சர்மா எழுதி இயக்கும் ‘உணர்வுகள் தொடர்கதை’ படத்தின் மூலம் ஷெர்லின் சேத் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்துவைக்கிறார். பாலு ‌ஷர்மா தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புலு’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

இந்த படத்தில் ஷெர்லினுக்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் கவனம் பெற்ற ரிஷிகேஷ் நடிக்கிறார். நகர்ப்புறக் காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் பணிக்கு செல்லும் கணவன் மனைவிக்குள் நடக்கும் சம்பவங்களை கொண்டு உருவாகி உள்ளது.

இந்த படத்தில் நடிப்பதற்காக ஷெர்லின் தமிழ் கற்றுக்கொண்டுள்ளார். இந்த படத்தில் விவேக் மெர்வின், தர்புகா சிவா, சக்தி ஸ்ரீ கோபாலன், இந்நோ கெங்கோ, சுனில், வருண் என மொத்தம் ஆறு இசையமைப்பாளர்கள் பணியாற்றுகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*