நெல்லையில் உருவாகும் ஜி.வி.பிரகாஷ் படம்..!!

ரமேஷ்.பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தை எழில் இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஈஷா ரெபா தமிழில் அறிமுகமாகிறார்.

காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலியில் நடந்து வருகிறது. நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நேற்று படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். இதில் ஜி.வி.பிரகாஷ், நகைச்சுவை நடிகர்கள் சதிஷ், வையாபுரி, மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா ஆகியோர் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

படப்பிடிப்பை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சி.சத்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*