சகுந்தலா தேவியாக மாறும் வித்யா பாலன்..!!

கணக்கு புலி, மனித கணிப்பொறி என்று சிறப்புப் பெயர் கொண்டு குறிப்பிடப்படும் சகுந்தலா தேவியின் பயோபிக் சினிமாவில் வித்யாபாலன், சகுந்தலா தேவியாக நடிக்க இருக்கிறார். இந்த செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தை அனு மேனன் இயக்குகிறார். இவர் சில ஆங்கில படங்களை இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்களைப் பெருக்கி விடை கூறுவதில் இயந்திரத்தைவிட மின்னல் வேகத்தில் கூறும் திறன் கொண்டவர் சகுந்தலா. எண்களின் கனமூலத்தைச் சொல்வதில் பலமுறை கணினியைத் தோற்கடித்துள்ளார்.

1980-ல் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் இரண்டு 13 எண்களைப் பெருக்கி, 23 விநாடிகளில் பதில் கூறி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கணிதம் தவிர, நாவல்கள், சமையல் குறிப்புகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*