ஜெய்யுடன் மோதும் அஜித், விஜய் வில்லன்கள்..!!

ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. இப்படத்தில் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வரும் நிலையி, ராகுல் தேவ் (அஜித்தின் வேதாளம் புகழ்) மற்றும் தேவ் கில் (மகதீரா மற்றும் விஜய்யின் சுறா புகழ்) ஆகியோர் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

இது குறித்து இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறும்போது, ‘நிச்சயமாக, சூப்பர் ஹீரோவுக்கு இணையாக சக்திவாய்ந்த சூப்பர் வில்லன்கள் இருக்கும் போது மட்டுமே மோதலின் தீவிரம் மிகவும் கடுமையானதாக இருக்கும். ஜெய்யை நாயகனாக நடிக்க முடிவெடுத்த போதே, எங்கள் அடுத்த வேலை, தோற்கடிக்க முடியாத ஒரு வில்லனை தேடும் படலத்தில் தொடர்ந்தது.

நிறைய விஷயங்களை மனதில் வைத்து வில்லனை தேடியபோது, ராகுல் தேவ் மற்றும் தேவ் கில் ஆகியோரை நடிக்க வைக்க முடிவெடுத்தோம். இருவருமே சினிமா அர்ப்பணிப்பு உடையவர்கள், வில்லனாக நடித்தாலும் அகில இந்திய அளவில் பிரபலமானவர்கள். இந்த படத்தில் இருவரும் சகோதரர்களாக நடிக்கிறார்கள், ராகுல் தேவ் ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச தாதாவாக நடிக்கிறார். ஒரு சாதாரண மனிதர் தன்னுடைய மக்களின் நலனுக்காக சூப்பர் சக்திகளை வைத்து எப்படி போராடுகிறார் என்பது தான் கதை” என்றார்.

இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் அந்நியன், முதல்வன் உட்பட 90க்கும் மேற்பட்ட படங்களுக்கு VFX மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய் மற்றும் பானுஸ்ரீ முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை நாகர்கோவில் சார்ந்த திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பை கையாள்கிறார். விஷால் பீட்டர் இசையமைக்க, மகேஷ் கலை இயக்குனராகவும், ராதிகா நடன இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*