அதர்வாவின் 100 படத்தின் தடை நீங்கியது..!!

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா – ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100. முதன்முறையாக அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் இன்று வெளியாவதாக இருந்தது.

ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக படத்தின் இயக்குனர் இன்று வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்திற்கு வழங்கப்பட்ட தடை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், 100 திரைப்படம் நாளை (மே 10, 2019) உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது.

ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*