கொம்புவச்ச சிங்கம்டா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!!
‘குற்றம் 23’, ‘தடம்’ படங்களை தொடர்ந்து ரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர்குமார் தயாரிப்பில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’.
‘சுந்தரபாண்டியன்’ வெற்றியை தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபாகரன் – சசிகுமார் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஹரீஷ் பெரடி, துளசி, தீபா ராமனுஜம், செண்ராயன் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மறைந்த இயக்குநர் மகேந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
1990-1994 கால கட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த, பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள செய்துள்ள இந்த படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். டான் பாஸ்கோ படத்தொகுப்பையும், அன்பறிவ் ஸ்டன்ட் காட்சிகளையும் கவனிக்கின்றனர்.