எஸ்.ஜே.சூர்யா – பா.இரஞ்சித் புதிய கூட்டணி..!!!

`பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகி இருக்கும் `இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், ஆகஸ்டில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் சமூக கருத்துடன் குடும்ப படமாக உருவாக இருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா தற்போது அமிதாப் பச்சனுடன் இணைந்து `உயர்ந்த மனிதன்’ படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் `மான்ஸ்டர்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*