அம்மா வேடங்களில் கவனம் செலுத்தும் கவுசல்யா..!!

காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன் உள்பட பல வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் கவுசல்யா. சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தில் ஆதிக்கு அம்மாவாக நடித்தவர் அடுத்து லைலா என்ற படத்திலும் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.

பூதோபாஸ் இன்டர்நே‌ஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் தானாநாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார். பாஸ்கர், சீனுவாசன், பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், கவுசல்யா, செர்பியா, ஆதியா, சிசர்மனோகர் ரஞ்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கொடைக்கானல் சென்னை பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தின் கதாநாயகி தானாநாயுடு துபாயில் பிறந்து வளர்ந்தவர் இப்போது லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக 45 நாட்கள் இந்தியா வந்து நடித்து முடித்து சென்றுள்ளார். பேயை மையமாக கொண்ட திகில் படமாக உருவாகி உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*