இரும்புத்திரை 2 – சமந்தா இடத்தை பிடித்த பிரபல நடிகை..!!

விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர். தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. திரைக்கதையும் தயாராகி வந்தது. தற்போது இரும்புத்திரை இரண்டாம் பாகத்துக்கான பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகை தேர்வு நடந்து வந்த நிலையில், விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஷ்ரத்தாவிடம் கேட்ட போது, அவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தை இயக்குநர் எழிலிடம் பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்குகிறார்.

விஷால் நடிப்பில் அயோக்யா படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் இரும்புத்திரை 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்திலும் விஷால் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*