லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

நடிகர், இயக்குநர் என பன்முக திறமைகளை கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `ஹவுஸ் ஓனர்’. பசங்க கிஷோர் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஆடுகளம் கிஷோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையமாக வைத்து தீவிரமான காதல் கதையாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்த வரும் நிலையில், படம் வருகிற ஜூன் 21-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவையும், பிரேம் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*