ஜி.வி.பிரகாஷ் படத்தில் சாக்‌ஷி அகர்வால்..!!

ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்து அவர் அளித்த பேட்டியில் இருந்து,

“ரஜினி சார் சினிமாவில் பெரிய அடையாளம் அவர் படம் மூலமாக எனக்கு ஒரு அடையாளம் வந்தது மகிழ்ச்சி. இப்போது கதையின் நாயகியாக சின்ட்ரெல்லா படத்தில் ராய் லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் அப்படம் எனது சினிமா வாழ்க்கையில் மைல்கல்லாக அமையும்.

அத்துடன் எழில் சார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடனும் இணைந்து நடித்து வருகிறேன். இது ஒரு ஹாரர் கலந்த காமெடி படம். எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் நம்மிடம் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்துவிடுவார். அவரது இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. அதேபோல் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும் அனைத்து நடிகைகளுக்கும் அவரோடு மீண்டும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். இந்த படத்தில் பாவாடை தாவணி கட்டி நெல்லை தமிழில் பேசி நடித்திருக்கிறேன்.

தற்போது திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அணீஸ் இயக்கத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். நிச்சயம் இந்த ஆண்டு எனக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான ஆண்டாக இருக்கும்” என்றார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*