பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா..!!

கமல்ஹாசனின் புரோமோ வீடீயோ வெளியானது முதலே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளரை உறுதி செய்திருக்கிறார்கள்.

அந்தப் போட்டியாளர் `ஓ.கே. ஓ.கே.’ படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த காமெடி நடிகை `ஜாங்கிரி’ மதுமிதா. சின்னத் திரையில் `சின்ன பாப்பா பெரிய பாப்பா’வில் காமெடி செய்தவர். சில மாதங்களுக்கு முன்பு உதவி இயக்குனர் மோசஸ் ஜோயலைத் திருமணம் செய்துகொண்டார்.

`மணமாகி கொஞ்ச நாளிலேயே கணவரை மூன்று மாதங்கள் பிரிந்து எப்படி பிக் பாஸ் வீட்டுக்கு’ என்றால், “அவங்களுக்கு சவால்னா ரொம்ப பிடிச்ச வி‌ஷயம். இந்த வாய்ப்பை ஒரு சவாலா எடுத்து பண்ணணும்னு நினைக்கிறாங்க. தவிர, இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கறதில்லையே! பொதுவாகவே வர்ற வாய்ப்புகளைத் தவற விடக்கூடாதுன்னு நினைக்கிறவங்க அவங்க’’ என்கின்றனர் மதுமிதாவுக்கு நெருக்கமானவர்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*